Posts

Showing posts with the label விநாயகா

விநாயகா போற்றி

Image
  ஓம் என்னும் ப்ரணவ ரூப நாயகா உமையவளின் பாலனே விநாயகா தேவர் மூவர் போற்றும் வேத நாயகா தேவாதி தேவனே விநாயகா வல்வினைகள் தீர்க்கும் சக்தி நாயகா வேண்டும் வரம் தந்திடும் விநாயகா மௌனத்தின் முழுப்பொருளே நாயகா முக்கண்ணன் மைந்தனே விநாயகா பக்தர்களின் உறைவிடமே நாயகா சர்வ சக்திகளின் பிறப்பிடம் விநாயகா முக்திதனை அளித்திடுவாய் நாயகா உனை நித்தம் பணிந்திடுவோம் விநாயகா. ஓம் அருள்மிகு ஸ்ரீ மணக்குள விநாயகா போற்றி போற்றி போற்றி. ஓம் அருள்மிகு ஸ்ரீ ஆறுமுகப் பெருமானுக்கு ஹரஹரஹோஹரா. ஓம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்பாள் துணை.