விஷ்ணு பகவானின் 10 அவதாரங்களும், அதன் கதைகளும்.
இந்து புராணங்களுக்கும், அதன் மர்ம கதைகளுக்கும் முடிவே கிடையாது. நீங்கள் உங்களை எந்தளவுக்கு இந்த மர்ம கதைகளில் கொண்டு போகுறீர்களோ அதற்கேற்ற உட்கிளர்ச்சியை அடைவீர்கள். ஒவ்வொரு சடங்குக்கும் அழகாக விவரிக்கப்பட்ட கதைகளின் வடிவத்தில், ஒரு விளக்கத்தை நாம் காண நேரிடலாம். தலைமுறை கடந்து இந்த கதைகள் எடுத்துச்செல்லப்பட்டு இப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உலகத்தில் எப்போதெல்லாம் அநீதியும் தீய சக்தியும் தலை விரித்து ஆடுகிறதோ, அப்போதெல்லாம் அதனை வேரோடு கருவறுக்க விஷ்ணு பகவான் வந்து சேர்வார் என்று நம்பப்படுகிறது.அதனால் மனித இனத்தை மிரட்டும் அவ்வகை தீய சக்திகளை அழிக்க காலத்திற்கேற்ப ஒவ்வொரு அவதாரத்தில் தோன்றியுள்ளார் விஷ்ணு பகவான். இது வரை விஷ்ணு பகவான் 9 அவதாரங்களை எடுத்துள்ளார் என்று நம்பப்படுகிறது. அவருடைய பத்தாவது அவதாரம் கலியுகம் முடியும் தருவாயில் வெளிப்படும் என்றும் நம்பப்படுகிறது. அதனால் இந்த பத்து அவதாரங்களையும் ஒன்று சேர்த்து தசாவதாரம் என்று அழைக்கின்றனர். சத் யுகத்தின் போது, இந்த பூமி மீது முதல் மூன்று அவதாரங்கள் எடுக்கப்பட்டது. அடுத்த மூன்று அவதாரங்கள் திரேட்ட...