Sambrani Vaasagare Karuppusamy Song Lyrics in Tamil
Sambrani Vaasagare is a popular devotional song dedicated to Karuppusamy Swamy. This song is widely sung during village festivals, night poojas, and special worship rituals. சாம்பிராணி வாசகா.. சாட்டக்கம்பு நாயகா... வாடா...நீ எங்க... கருப்பா....! ஓ ...மீசையத்தான் தூக்கி வா... மின்னல்,இடி காட்டி வா... வாடா ஏந் தங்கக் கருப்பா...! அட..ஏங்கிக் கெடக்கு ஊரு சனங்க..! பொங்கி ஓடி வாடா.. கதிகலங்க...! கெண்டக் காலு சலங்க சலசலக்க...! திரு நீருப் பூச்சு பளபளக்க...! காத்தாக... மழையாக... நெருப்பாக... புகையாக.... உருமாறி வா கருப்பா..! எங்க வேலங்குடி சாமி கருப்பா...! கற்பூரம் எடுத்தோம் கலர் மால தொடுத்தோம் வாயார ஓம்பேர சொல்லி அழைச்சோம்..! விரதங்கள முடிச்சோம் வீச்சருவா அடிச்சோம் காணிக்கையா நேத்திக் கடன் செஞ்சு முடிச்சோம்...! வெள்ளிப் பெரம்பெடு்த்து... வெரட்டி.. சுழட்டி... வாடா....ஏ வேட்டக் கருப்பா...! வெள்ளக்குதிர ஏறி வெறியாக சீறும் மார நாட்டு சிங்கக் கருப்பா...! பட்டி பதினெட்டுக்கும் படி பதினெட்டுக்கும் அட அதிபதியா சுத்திக் காத்து நிக்கும்.. பாத்தாலே அருள் வரும்ப்பா...! எங்க உறங்காபுளி கருப்பா....