சிவாயம் என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருபோதும் இல்லை. ஜடாமுனி என்று சிந்தித்திருப்போர்க்கு எதிரிகள் தொல்லை ஒருபோதும் இல்லை.

முனீஸ்வரன் என்பவர் இந்து சமய சிறு தெய்வங்களில் ஒருவராவார். இவர் சைவ கடவுளான சிவபெருமானின் வடிவமாக கருதப்படுகிறார். முனீசுவரன் வீரமும், ஆவேசமும் நிறைந்த ஆண் தெய்வமாகும்.



முனீஸ்வரன் எனும் பெயர் முனிவர்களுக்கெல்லாம் ஈசுவரனாக இருந்து ஞானத்தை வழங்கியவன் எனக் குறிப்பிடும்.

கிராம மக்கள் முனி, முனியாண்டி, முனியன், முனியப்பர் என பல பெயர்களாலும் அழைத்து வழிபடுவர்.

முனி என்ற சொல் ரிக் வேதத்தில் 'தெய்வ ஆவேசம் படைத்தவர்' என்றும், பயமற்றவர் என்றும் பொருள் கொள்ளப் படுகின்றது. உபநிடதம், பகவத்கீதை என்பவற்றில் உலக வாழ்க்கையை வெறுத்து ஞான வரம்பாகிய மௌனத்தைக் கடைப்பிடித்து பரமதியானத்தில் ஆழ்ந்து தட்பவெப்ப, சுகதுக்கம் தாக்கப்படாமல் விருப்பு - வெறுப்பு, கோபதாபம் முதலியவை அறவே நீக்கியவர்கள் என்றும் கூறப்படுகின்றது.

கிராம மக்கள் மத்தியில் தவறு செய்தால் தலையில் அடிப்பவர், நம்மோடு ஒரு மனிதராகவே வருவார், வானுக்கும் பூமிக்குமாக ஒளிப்பிழம்பாகக் காட்சி தருபவர் என்று பலவாறு நம்பிக்கைகள் காணப்படுகின்றன.

தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் முனீசுவரர் வழிபாடு சிறப்படைந்து காணப்படுகின்றது.

மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாடு என்பது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் வடக்கு வாசலில் அமைந்துள்ள மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாட்டைக் குறிக்கின்றது.

நாட்டார் தெய்வங்களில் முனி என்பது காவல் தெய்வத்தின் பெயராகும். இந்தப் பெயரில் எண்ணற்றவர்கள் உள்ளதாக குறிப்புகள் உள்ளன. பஞ்ச முனி என ஐந்து முனிகள் பச்சையம்மனுக்கு காவலாக உள்ளன. சில இடங்களில் சப்த முனிகளும் உள்ளார்கள்.

வாழ்முனி, செம்முனி, கருமுனி, முத்துமுனி, வேதமுனி, பூமுனி போன்ற ஐந்து முனிகளை பஞ்ச முனி என்கிறார்கள், இவர்கள் பச்சையம்மனுக்கு துணையாக இருந்தவர்கள்.

வாழ்முனி, செம்முனி, முத்துமுனி, ஜடாமுனி, பாலக்காட்டு முனி, வேதமுனி, இலாடமுனி ஆகிய ஏழு முனிகளையும் வணங்குகின்றனர்.


முனீஸ்வரன் வழிபாடு என்பது காலம் காலமாக கிராம மக்கள் மட்டுமல்லாது நகரத்து மக்களும் பயபக்தியுடன் வணங்கக்கூடிய தெய்வ வழிபாடாகும். சுமார் 300 ஆண்டுக்கு முன்பிருந்தே நாம் முனீஸ்வரரை வழிபட்டு வருகிறோம். வீரமும், ஆவேசமும் நிறைந்த ஆண் தெய்வமாக, முனீஸ்வரர் கருதப்படுகிறார். முற்காலத்தில், ஒரு கிராமத்தையே இரவில் கொள்ளையர்களிடம் இருந்து காப்பவராக முனீஸ்வரர் இருந்துள்ளார்.

ஜடா முனி

ஜடா முனி - நாதமுனி, வேதமுனி, பூதமுனி, சக்திமுனி, மாயமுனி, மந்திரமுனி, பால்முனி, கருமுனி, சுடலைமுனி என்று பல்வேறு வகையாக முனீஸ்வரன் அழைக்கப்படுகிறார்.

ஜடாமுனி - மாய ஜடாமுனி, ஜல ஜடாமுனி, மலை ஜடாமுனி, குகை ஜடாமுனி, வன ஜடாமுனி என அனைத்து அவதாரங்களிலும் அருள்புரிகிறார்.





ஜடாமுனி சிவனுடைய அம்சம் நிறைந்தவர். அதாவது சுடுகாட்டு சாம்பலை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு, பாம்பைக் கழுத்தில் ஆபரணமாக அணிந்து, கையில் பலவிதமான ஆயுதங்களைக் கொண்டு அகோர ரூபத்தில் காட்சிதந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர் இந்த ஜடாமுனி. சிவபெருமானின் முழு அம்சம் பொருந்திய ஜடாமுனி, தன் காலினால் எமனின் உயிரையே வீழ்த்தும் அளவுக்கு அற்புத சக்திகள் நிறைந்தவர்.

எல்லாவிதமான தெய்வங்களும் இந்த ஜடாமுனிக்கு அடங்கும். எல்லா தெய்வங்களையும் ஜடா முனி கட்டுப்படுத்த முடியும். சடையுடன் கூடிய (தலைவிரி கோலமாக) இருக்கும் ஜடாமுனியை வணங்குவதால் நம்முடைய எல்லாவிதமான எதிரிகளும் ஒழிந்து விடுவர். தீமைகள் விலகும், வறுமை நீங்கும், பில்லி ஏவல் சூனியம் விலகும், எதிரிகள் செய்யும் கெடுதல்கள் விலகும், அனைத்து நன்மைகளையும் ஏற்படுத்தும் சக்தி படைத்தவர் இந்த ஜடாமுனி.

ஜடாமுனியின் முக்கிய அம்சமாக கருதப்படுவது, தண்ணீரில் தவம் இருக்கக் கூடிய சக்தி படைத்தவர் மேலும் எப்போதும் தவக்கோலத்தில் இருப்பார். இப்படி இருக்கும் ஜடா முனியை வழிபடுவதால் நமக்கு வேண்டிய பலன்கள் உடனே கிடைக்கும் என்பது ஐதீகம்.

முனீஸ்வரன் வழிபாடு

தோஷங்கள் விலகுவதற்கு ஜடாமுனிக்கு வடை, பால், பாயாசம், சுருட்டு, கொழுக்கட்டை, இறைச்சி, அவல், பொரி, கடலை இவற்றை வைத்து படையல் செய்து வழிபடுவதால் அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகும்.

இதனால்தான் அனைத்து கிராமப்புறங்களிலும் ஜடாமுனி, பல்வேறு விதமான முனீஸ்வரன் பெயர்களில் வைத்து பூஜிக்கப்படுகிறார். எப்படிப்பட்ட தீர்க்கமுடியாத பிரச்சனையாக இருந்தாலும், ஜடாமுனியின் அருளைக் கொண்டு அனைத்து தீய சக்திகளையும் வீழ்த்தி விடலாம். எந்த ஒரு தீய சக்தியையும் அழித்து நல்வழிப்படுத்தக் கூடிய அருள் கொண்டவர் இந்த ஜடாமுனீஸ்வரர்.

சப்த முனி

முத்தையர் முனி (முத்துமுனி)
சின்ன முத்தையர் முனி (சின்ன முத்துமுனி)
நொண்டி முனி
ஜடாமுனி
பூ முனி
செம்முனி
வாள் முனி

சிவாயம் என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருபோதும் இல்லை. ஜடாமுனி என்று சிந்தித்திருப்போர்க்கு எதிரிகள் தொல்லை ஒருபோதும் இல்லை.

Comments

Popular posts from this blog

MAHA MUNISHWARAN MANTRA

Collection of mantras for Ayya & Amma

அருவா மினுக்குதையா எங்க தேகம் சிலுக்குதையா....அருள்மிகு காட்டு முனீஸ்வரர் பாடல்