Sambrani Vaasagare | Karuppusamy | Song



சாம்பிராணி வாசகா..
சாட்டக்கம்பு நாயகா...
வாடா...நீ எங்க...
கருப்பா....!
ஓ ...மீசையத்தான் தூக்கி வா...
மின்னல்,இடி காட்டி
வா...
வாடா ஏந்
தங்கக் கருப்பா...!
அட..ஏங்கிக் கெடக்கு
ஊரு சனங்க..!
பொங்கி ஓடி வாடா..
கதிகலங்க...!
கெண்டக் காலு சலங்க
சலசலக்க...!
திரு நீருப் பூச்சு
பளபளக்க...!
காத்தாக...
மழையாக...
நெருப்பாக...
புகையாக....
உருமாறி வா கருப்பா..!
எங்க வேலங்குடி
சாமி கருப்பா...!







 

 

கற்பூரம் எடுத்தோம்
கலர் மால தொடுத்தோம்
வாயார ஓம்பேர
சொல்லி அழைச்சோம்..!
விரதங்கள முடிச்சோம்
வீச்சருவா அடிச்சோம்
காணிக்கையா
நேத்திக் கடன்
செஞ்சு முடிச்சோம்...!
வெள்ளிப் பெரம்பெடு்த்து...
வெரட்டி..
சுழட்டி...
வாடா....ஏ
வேட்டக் கருப்பா...!
வெள்ளக்குதிர ஏறி
வெறியாக சீறும்
மார நாட்டு
சிங்கக் கருப்பா...!
பட்டி பதினெட்டுக்கும்
படி பதினெட்டுக்கும்
அட அதிபதியா
சுத்திக் காத்து நிக்கும்..
பாத்தாலே
அருள் வரும்ப்பா...! எங்க
உறங்காபுளி 
கருப்பா....! 

 

 
பத்தியத்த எடுத்தோம்
பக்தியெல்லாம் குடுத்தோம்...!
பட்ட கொற தீத்திடப்பா
படையல் இட்டோம்..!
ஓ.. வெட்டருவா
வெளிச்சம்...
வேதனையத்
தொரத்தும்...
வெங்கலத்தில்
மணிவாங்கி
அள்ளி முடிச்சோம்..!
உடுக்க அடி
கிடுகிடுக்க...
உருமி அடி
எதிரொலிக்க...
உள்ளுக்குள்ள
வா...கருப்பா...!
ஓ ..சங்கிலியும்
சர..சரக்க...
சாம்பிராணி
மண..மணக்க...
சத்தங் குடு
சைவக் கருப்பா...!
கன்னம் துடி..துடிக்க..
கண்ணும் செவ..செவக்க...
அங்கே இடி முழங்க..
இங்கே அனல் அடிக்க..
வாடா..ஏ
வீர கருப்பா...! எங்க
வேலங்குடி
சாமி கருப்பா...! 





credits - KIRRTESH RECORDS

 


 

Comments

Popular posts from this blog

அருவா மினுக்குதையா எங்க தேகம் சிலுக்குதையா....அருள்மிகு காட்டு முனீஸ்வரர் பாடல்

MAHA MUNISHWARAN MANTRA

Collection of mantras for Ayya & Amma