முருகனும் வள்ளியும்
வேடர்களின் மகளான வள்ளியுடன் முருகன் கொண்டு இருந்த காதலும் அந்தக் கடவுளின் இரண்டாவது திருமணமும் தமிழ் கதைகளில் பிரபலமானது. சமிஸ்கிருத நூல்களில் ஸ்கந்தனைப் பற்றிக் கூறும்போது அவரை ஒரு பிரும்மச்சாரி அல்லது தேவக் கடவுளான தேவசேனாவை (தெய்வானை) மணந்தவர் என்று மட்டுமே கூறுகின்றது. அதற்கு மாறாக பல தமிழ் நூல்களில் வள்ளியே முருகனின் கணவர் என்று கூறி வந்துள்ளது. இது பல காலமாக திராவிடர்களினால் நம்பப்பட்டு வந்தக் கதை ஆகும். பண்டைய இன தமிழ் மக்கள் இதுதான் உண்மை என நம்புவதற்குக் காரணம் 1350 ஆம் ஆண்டில் காஞ்சீபுரத்தில் இயற்றியதாகக் கூறப்படும் குச்சியப்பா என்பவர் எழுதி உள்ள கந்த புராணத்தின் 267 செய்யுளில் காணப்படும் கடைசி அத்தியாயமான வள்ளியம்மை திருமணப் படலம் என்பதே. அது என்ன? தொண்டை நாட்டின் மேற்பட்டியின் அருகில் உள்ளது வள்ளி ஈர்ப்பு என்ற வள்ளி மலை. அந்த மலையின் அடிவாரத்தில்தான் நம்பி என்ற வேடன் இருந்தான். அவனுக்குப் பிறந்த அனைத்துக் குழைந்தைகளுமே ஆண் குழந்தைகளாக இருந்தன. அதனால் அவன் தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என ஏங்கிக் கொண்டு இருந்தான். அந்த மலையின் அடிவாரத்தில் சிலமுகி எனும் துறவி ...