மகாவிஷ்ணு சிறுகதை
கனவிலும் நனவிலும் இளவரசியின் எழிலுருவத்தைத் தரிசிப்பதிலேயே ஆனந்தம் கண்டான்.இளவரசியுடன் உரையாடுவது போல் – உறவாடுவது போல எண்ணி தனக்குத்தானே புலம்பிக் கொண்டான்.விடிய விடியத் தூக்கமில்லாமல் படுக்கையில் கிடந்த நெசவாளி, விடிந்து நெடுநேரமாகியும் படுக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை.காலையில் வேலைக்குப் புறப்பட்ட தச்சன் நண்பனுடைய அறைக்கு வந்தான். வழக்கமாக அதிகாலையிலேயே எழுந்து காலைக் கடன்களை முடித்து நீராடித் தயாராக இருக்கும் நெசவாளி அன்று அவ்வளவு நேரமாகியும் படுக்கையிலேயே கிடந்தது தச்சனுக்கு பெருவியப்பை அளித்தது.அருகில் நெருங்கி நண்பனைக் கவனித்தான். அவன் தோற்றம் அதிர்ச்சி தரக்கூடியதாகவே இருந்தது.கண்கள் குழிவிழுந்துக் கிடந்தன. உடல் வெளிறி இரத்தசோகை பிடித்தது போலக் காட்சியளித்தான். கை கால்கள் மெலிந்து – சோர்ந்து கிடந்தன. முதல் நாள் இரவு அரண்மனை விழாவின் போது பார்த்த தன் நண்பனா இவன் என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது தச்சனுக்கு.என்ன நண்பா ? இரவு என்ன ஆயிற்று. திடீரென ஏதாவது கடுமையான பிணிக்கு இலக்கானாயா ? என்று கவலையோடு கேட்ட...