Posts

Showing posts with the label சனி பகவான்

சனி பகவான் ஹீரோவா? இல்லை வில்லனா?

Image
சனி பகவான் ஹீரோவா? இல்லை வில்லனா?      ஒருவன் யாருக்கு பயப்படுகிறானோ இல்லையோ, சனி பகவானுக்கு பயப்பட்டே ஆக வேண்டும். ஏனென்றால் இவரிடமிருந்து யாரும் தப்ப முடியாது.      சிவனா இருந்தாலும் சரி. எமனாக இருந்தாலும் சரி. அல்லது வேறு எவனாக இருந்தாலும் சரி. சனியின் தீர்ப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.      நவ கிரஹங்களில் கிரகங்களில், சனி பகவானும் ஒருவர். சனைச்சரன் என்றும், மந்தன் என்றும் குறிப்பிடுவர். 'சனை' என்றால் மெள்ள, அதாவது மெதுவாக என்று அர்த்தம். ஒரு ராசியில் தனது பயணத்தைச் சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறார் சனி பகவான். மற்ற கிரகங்களைவிட இவருடைய பயணம் மெதுவாக இருப்பதால், அந்தப் பெயரே பொருந்துகிறது இவருக்கு! பார்வையில் விபரீதம்      சூரிய புத்திரன் சனீஸ்வர பகவானின் திருவிழிகளிலே ஓர் அபார சக்தி! அவரது பார்வையிலே தனி தீட்சண்யம்! அவரது பார்வை பட்ட மாத்திரத்திலேயே பல விபரீதங்கள் ஏற்படும்! சாயாதேவி, குழந்தை சனீஸ்வரனின் நிலை கண்டு கண் கலங்கினாள். தனது புத்திரனால் மற்றவர்களுக்குத் துன்பம் ஏதும் வர வேண்டாம் என்...