Posts

Showing posts from September, 2019

சனி பகவான் ஹீரோவா? இல்லை வில்லனா?

Image
சனி பகவான் ஹீரோவா? இல்லை வில்லனா?      ஒருவன் யாருக்கு பயப்படுகிறானோ இல்லையோ, சனி பகவானுக்கு பயப்பட்டே ஆக வேண்டும். ஏனென்றால் இவரிடமிருந்து யாரும் தப்ப முடியாது.      சிவனா இருந்தாலும் சரி. எமனாக இருந்தாலும் சரி. அல்லது வேறு எவனாக இருந்தாலும் சரி. சனியின் தீர்ப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.      நவ கிரஹங்களில் கிரகங்களில், சனி பகவானும் ஒருவர். சனைச்சரன் என்றும், மந்தன் என்றும் குறிப்பிடுவர். 'சனை' என்றால் மெள்ள, அதாவது மெதுவாக என்று அர்த்தம். ஒரு ராசியில் தனது பயணத்தைச் சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறார் சனி பகவான். மற்ற கிரகங்களைவிட இவருடைய பயணம் மெதுவாக இருப்பதால், அந்தப் பெயரே பொருந்துகிறது இவருக்கு! பார்வையில் விபரீதம்      சூரிய புத்திரன் சனீஸ்வர பகவானின் திருவிழிகளிலே ஓர் அபார சக்தி! அவரது பார்வையிலே தனி தீட்சண்யம்! அவரது பார்வை பட்ட மாத்திரத்திலேயே பல விபரீதங்கள் ஏற்படும்! சாயாதேவி, குழந்தை சனீஸ்வரனின் நிலை கண்டு கண் கலங்கினாள். தனது புத்திரனால் மற்றவர்களுக்குத் துன்பம் ஏதும் வர வேண்டாம் என்பதற்காக, சனீஸ்வரரை எங்கும் அனுப்பாமல், தனது கண்காணி

சிவாயம் என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருபோதும் இல்லை. ஜடாமுனி என்று சிந்தித்திருப்போர்க்கு எதிரிகள் தொல்லை ஒருபோதும் இல்லை.

Image
முனீஸ்வரன் என்பவர் இந்து சமய சிறு தெய்வங்களில் ஒருவராவார். இவர் சைவ கடவுளான சிவபெருமானின் வடிவமாக கருதப்படுகிறார். முனீசுவரன் வீரமும், ஆவேசமும் நிறைந்த ஆண் தெய்வமாகும். முனீஸ்வரன் எனும் பெயர் முனிவர்களுக்கெல்லாம் ஈசுவரனாக இருந்து ஞானத்தை வழங்கியவன் எனக் குறிப்பிடும். கிராம மக்கள் முனி, முனியாண்டி, முனியன், முனியப்பர் என பல பெயர்களாலும் அழைத்து வழிபடுவர். முனி என்ற சொல் ரிக் வேதத்தில் 'தெய்வ ஆவேசம் படைத்தவர்' என்றும், பயமற்றவர் என்றும் பொருள் கொள்ளப் படுகின்றது. உபநிடதம், பகவத்கீதை என்பவற்றில் உலக வாழ்க்கையை வெறுத்து ஞான வரம்பாகிய மௌனத்தைக் கடைப்பிடித்து பரமதியானத்தில் ஆழ்ந்து தட்பவெப்ப, சுகதுக்கம் தாக்கப்படாமல் விருப்பு - வெறுப்பு, கோபதாபம் முதலியவை அறவே நீக்கியவர்கள் என்றும் கூறப்படுகின்றது. கிராம மக்கள் மத்தியில் தவறு செய்தால் தலையில் அடிப்பவர், நம்மோடு ஒரு மனிதராகவே வருவார், வானுக்கும் பூமிக்குமாக ஒளிப்பிழம்பாகக் காட்சி தருபவர் என்று பலவாறு நம்பிக்கைகள் காணப்படுகின்றன. தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் முனீசுவரர் வழிபாடு சிறப்படைந்து காணப்