அனுமாருக்கு மட்டும் செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா ?

ராவணன் காவலில் சீதாபிராட்டி இருந்த போது, சீதாபிராட்டியைத் தேடி இலங்கை வந்தார் ஹனுமார்.
அங்கு மரத்தடியில் அமர்ந்து இருந்த சீதாபிராட்டியை நோக்கினார்.


முதலில் அவளது காலில் இருந்த மெட்டியை நோக்கிப் பார்த்தப்பின்,
அவளது நெற்றியில் உள்ள குங்குமத்தைப் பார்த்தபோது,
அங்கு குங்குமத்திற்குப் பதில் செந்தூரம் இருந்ததைக் கண்டார்.


அம்மா நெற்றியில் குங்குமத்திற்கு பதிலாக ஏன் செந்தூரம் உள்ளது என ஹனுமான் கேட்க, அதற்கு சீதாபிராட்டி, 'மைந்தா, என் அன்பான கணவரின் நினைவு மட்டும் தான்,
எப்போதும் என்னுடம் இருக்க வேண்டும் என நினைத்தே, செந்தூரத்தை இட்டுக் கொண்டேன்.


ஏன் என்றால் தூய்மையான செந்தூரத்தை,எத்தனை அழித்தாலும் அது முழுவதுமாக அழியாமல் அதன் கறையை விட்டு வைக்கும்.அது போலத்தான் என்னிடம் இருந்து என் கணவரின் நினைவை மாற்றவே முடியாது என்பதை காட்டவே, அதை இட்டுக் கொண்டேன் என்றாராம் சீதாபிராட்டி.


அதைக் கேட்ட ஹனுமார் புல்லரித்துப் போய், ராமரே என் நினைவில், மற்றும் நான் செய்யும் அனைத்திலும் இருக்கட்டும் என்ற மனதோடு,ராம நாமத்தை ஜபித்தபடி தனது உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொண்டாராம். அதனால் தான் ஹனுமாருக்கு செந்தூரம் இடுகிறோம்.






அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற்காக
ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு
கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே
ஒன்றை வைத்தான் அவன் நம்மை
அளித்துக் காப்பான்.


ராம். ராம்.
ஜெய் ஸ்ரீராம்.


Credits - Mantras & Slokas in tamil - மந்திரம்  & ஸ்லோகம்

Comments

Popular posts from this blog

MAHA MUNISHWARAN MANTRA

அருவா மினுக்குதையா எங்க தேகம் சிலுக்குதையா....அருள்மிகு காட்டு முனீஸ்வரர் பாடல்

Collection of mantras for Ayya & Amma